மெல்ல மெல்ல
உணர்வுகளுக்குள் உட்புகுந்து
தேடுகிறேன்
உன்னை
காற்றும்
நீரும்
நெருப்பும்
ஆகாயம்
திருடியதா உன்னை
எனக்கே எனக்கான நீ
எங்கிருக்கிறாய்
விழிகளில் வழியும்
நீருக்குள்
உட்புகுந்து
கவலைகளை மறக்கடிக்க
எப்போது வருவாய்
கவிதைகள் அல்லாத
கவிதைகளுக்குள்
உட்புகுந்து
என் உணர்வுகள்
தரும் தகிப்பை உணர்வாயா?
வா சீக்கிரமாக
ஒரு நரை முடி
நான் கிழப்பருவம்
ஏய்துவதாக
கட்டியம் கூறுகிறது
இன்னமும் உன் மீதான
ஆசை
நரைத்தபாடில்லை...
No comments:
Post a Comment