“ம்”
என்றொரு
உரையாடலை முடித்திருந்தேன்
மீண்டும் தொடர்வதெப்படி
தவித்திருந்தேன்
-:0:- -:0:--:0:-
“சரி”
என்ற சொல்லோடு
முடிந்துவிட்டது
உரையாடல்
மீண்டும்
துவக்க முடியா
மௌனத்தின்
ஆழத்தில்
மூழ்கிக்கொண்டிருந்தது
உயிர்
-:0:- -:0:--:0:-
காதலில்
கவிதை பொய்மை என்பேன்
அவனை கண்ட நாள்
நானே கவிதையானேன்
-:0:- -:0:--:0:-
பிழைகளால்
நிரம்பி வழிகிறது
உன் படைப்புகள்
என்றார்கள்
நானே படைப்பாற்றலின்
பிழை என்றேன்
அவர்களிடம்
-:0:- -:0:--:0:-
அவன் கற்பனையா
கனவா என்றாள்
கற்பனை என்றேன்
என் கண்கள் மூடிக்கொள்ளும் பொழுதெல்லாம்
என்னுடன் இருந்தான்
அவன்
-:0:- -:0:--:0:-
குதூகலத்தின்
மறுகோடியை அடைய
உன் ஒற்றை
புன்னகை போதுமானதாக
இருந்தது
-:0:- -:0:--:0:-
சீக்கிரம் இணங்கிவிடாதே
நீ
எத்தனைக்கும் அதிக
காதலின் ஆழமென
உணர்ந்து பார்க்கட்டும்
இவளின் உயிர்
No comments:
Post a Comment