இருள் பழகிய பின்
மென் வெளிச்சம் கண்டது
கண்கள்
புற்களின் பச்சையும்
சிமெண்ட் தரையும்
தொடுத்து வைத்த
கதம்பமாக
கட்டி முடிக்கா
கட்டடம் சூர்ப்பனகையாகி
நின்றாள்
சூர்ப்பனகைக்குள்
பெண்மை உணரா
இராமன் நினைவை
கலைத்தான்
தூரத்தில் விழித்து
விளையாடிய
விண்மீனை எட்டிப்
பிடிக்க ஆசை
வந்தது
நெருக்கத்தில்
கருப்பழகியாய்
வேப்பமரம்
மென் நடம் புரிந்தாள்
பக்கத்து பாய் வீட்டு
சன்னலில்
வெளிச்சம் கசிந்தது
நோன்பு கஞ்சி
நாக்கில் ருசி தட்டி
பேரிழப்பாக கதை
பேசியது
எங்கோ சிரிப்பொலிகள்
சிரிக்கிறது
நாய்கள்
குரைக்கிறது
நான் இல்லாமல்
போய்
மென் ஒளியாகிக் கொண்டிருந்த
சமயம்
அந்த குறுஞ்செய்தி
மனுஷியாக
மீட்டெடுத்தது.
No comments:
Post a Comment