Monday, 15 April 2024

கவிதை சாரல் - 2


 எடுக்கப் படுகிற

முடிவுகள் என்னவோ

முன் அனுபவங்களினால் தான்

எதிர்காலம்

என்னவாகுமென்று

தெரியாத போதும்


-:0:-

ஒவ்வொரு குறுஞ்செய்திக்காகவும்

காத்திருக்கிறது மனம்

நானாக தொடர வாய்ப்பில்லை

நீயாக அனுப்புவாயா?

-:0:-

இந்த அற்ப சந்தோஷத்திற்காகவா

அலைகிறாய் என்றேன்

சந்தோஷத்தில் ஏது

அற்பம் என்றாள்.

-:0:-

பிழைகளோடு 

எழுதினால் என்ன

மழலை பிழை

அற்புதமானது தான்

-:0:-

கொஞ்சம் பேசேன்

கொஞ்சிப் பேசினாலும்

வேண்டாம் எனப்போவதில்லை

-:0:-

No comments:

Post a Comment

எழுதுகிறேன் ஒரு கடிதம்.

  கடிதப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றதென செல்லம் கொஞ்ச முடியவில்லை இந்த கடிதத்திடம்.. ஏன் என்று பிறகு சொல்கிறேன்... --------------------...