Monday, 15 April 2024

கவிதை சாரல் - 3

 


உன் வார்த்தையின்

குத்து முனைகளை விட

தனிமை பெரும் வலியை

தந்துபோவதில்லை


-------------

முரண் கொள்ளும் கருத்துக்களால்
வலிக்கச் செய்தேனோ வென
தவித்த மனதின் வலியை சமன் படுத்த
தேடுகிறேன் அவனை
எட்டிய திசை யெங்கிலும்
வெட்ட வெளி!

--------------

வார்த்தையில்
மட்டும் தானா?
மனதிலும் விலகல்
நிகழ்வா?

------------------

நெருக்கம்
விடைப்பெற்றதும்
வெறுமையாகிறது
மனது
-------------------





நெஞ்சுக்குள் தோன்றும் ஆசையை
எனக்குள் மறைத்து நோகிறேன்
கண்களில் உயிர்த்து வெளிப்பட
என்னுடன் கதைகள் பேசினேன்
சாலை எங்கும் பூக்கும்
நெஞ்சில் உந்தன் தாக்கம்
விழிகள் நோகும் என்று நான்
நிலத்தில் பார்வை தாழ்த்தினேன்
உயிரை தீண்டும் பார்வையில்
உள்ளுக்குள் சிலிர்த்து வியர்க்கிறேன்
காதல் நெஞ்சில் சேர
மன போதை எல்லை மீற
கனவு என்னும் கீதையை
தினமும் புரட்டி பார்க்கிறேன்
சிரித்து எனக்குள் சிலிர்த்திட
உந்தன் பிம்பம் தேடினேன்
நீயும் என்னுள் வந்தாய்
தீயாய் தேகம் வென்றாய்
பாதை நீளும் சாலையில்
தொடரும் உந்தன் பாதங்கள்
நீண்டு வழியும் நிழலிலே
பதிந்து பிரியும் பார்வைகள்
மனமோ உன்னை நோக்க
விழிகள் எங்கோ பார்க்க
நிறங்கள் தேடி உடுத்தினேன்
மலராய் உன்னை சூடினேன்
முதலில் நீயே பார்த்திட
தவித்து உன்னை தேடினேன்
முகத்தை நீ பார்க்க
வியந்தேன் வெட்கம் பூக்க
உந்தன் கைகள் தீண்டிட
காணும் பொழுது ஏங்கினேன்
நெஞ்சில் சாய்ந்து துயின்றிட
யுகங்கள் பலவும் தாண்டினேன்
நீயும் என்னை தொட்டாய்
பறந்தேன் விண்ணில் சிட்டாய்
எங்கோ நீயும் மறைந்திட
விழிகள் தவித்து தேடினேன்
மாலை கூம்பும் மலர் என
மனது கூம்ப வாடினேன்
நீயும் தவிப்பாயோ
என்னை நினைப்பாயோ

No comments:

Post a Comment

எழுதுகிறேன் ஒரு கடிதம்.

  கடிதப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றதென செல்லம் கொஞ்ச முடியவில்லை இந்த கடிதத்திடம்.. ஏன் என்று பிறகு சொல்கிறேன்... --------------------...