Sunday, 3 May 2020

கந்தர்வன் நீ








காதலன் என்றறியப்பட்ட
கந்தர்வன் நீ
தனிமையின் கோட்பாடுகளை
எளிமையாக்க வந்தவன்

முத்தங்களால் நிரப்பி
முக மலர்ச்சியால் இதயத்தை பரப்பினாய்
கொஞ்சும் காமமும்
அதிகமான காதலும் பருகத் தந்தாய்
வா
நீரும் அத்துவான தனிமையும்
நிரந்தரமாய் இருக்கும் காடொன்றில்
கூடமைப்போம் நமக்காக
மின்மினிகளை சிநேகமாக்கி
கூட்டிற்கு விளக்கு வைப்போம்
அங்கே
இரவின் ஆட்சியில் விசிறிச் செல்லும்
வெளிச்சத்தில் உயிர் சக்தியின் மையத்தை
உணர்ந்து பார்க்கலாம்
காதலின் உன்னத பேருண்மைகளில்
கரைந்து மறுரூபமாகவென
கந்தர்வ காதல் செய்யலாம்
03 May 2015
# புராதானம் 

No comments:

Post a Comment

எழுதுகிறேன் ஒரு கடிதம்.

  கடிதப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றதென செல்லம் கொஞ்ச முடியவில்லை இந்த கடிதத்திடம்.. ஏன் என்று பிறகு சொல்கிறேன்... --------------------...